5.2.09

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம்
நாள் : 8-02-09 ஞாயிற்றுக் கிழமை (இன்ஷா அல்லாஹ்)
நேரம் : காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
பயிற்சி அளிப்பவர் :

நஸிர் அஹமது.B.E
(சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர்)

இடம்

: TNTJ மாநில தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு
மண்ணடி,
சென்னை- 600001.
மாணவிகளுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ மாணவர் அணி.

தொடர்பிற்கு : 9884235802

29.1.09

காதிர் முஹைதீன் மேல் நிலைப் பள்ளி அதிராம்பட்டினம்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.
நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க‌ முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com
என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள்.
உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திரும‌தி பி.ரோச‌ம்மாள்த‌லைவ‌ர்த‌லைமையாசிரிய‌ர்(செல் : 9442267365)
ஜ‌னாப் எம்.ஹாஜி முக‌மது துணைத் த‌லைவ‌ர்
ஜனாப் ஏ.மஹ்பூப் அலி செயலாள‌ர் (செல் : 9442767380)
திரு.ஏ.சீனிவாச‌ன் பொருளாளர் (செல் : 9443863697)
டாக்ட‌ர் ஆ.அஜ்முதீன் துணை செயளாளர் (செல் : 9894666791)
உங்க‌ள் ந‌ண்ப‌ர்களின் இமெயில் முக‌வ‌ரியைத் தெரிவிக்க‌வும் அவ‌ர்க‌ளிட‌ம் இத்த‌க‌வ‌லையும் தெரிவிக்க‌வும் http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html

22.1.09

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளின் பட்டியல்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தம் பிள்ளைகளை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்? எங்கு படிக்க வைக்கலாம்? என்று சிந்திக்கத் தொடங்கி அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டனர். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்
நன்றி லால்பேட்டை டாட் காம்

17.1.09

எட்டு வயதுச் சிறுவனின் கம்ப்யூட்டர் சாதனை



சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்? நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை அப்படி என்ன சாதனை செய்து விடப்போகிறது என அலட்சியமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அவர்களின் வளரும் வயதிலேயே அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை இனம் கண்டு, அதில் போதிய பயிற்சியைக் கொடுத்தால், சாதிப்பதற்குச் சாதனை வயது என ஒன்று தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் எட்டு வயதான அமன் ரஹ்மான்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு. அதனை இனம் காண வேண்டியது பெற்றோர்களின் கடமை. தலைக்கு மேல் வளர்ந்தாலும் அவன்/அவள் எங்களுக்குச் சிறு குழந்தை தான் என பெற்றோர்கள் கூறுவது வழக்கம். இதனை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை அந்தத் தரத்திலேயே வளர்க்கவும் செய்கின்றனர். இதற்கு படித்தவர்கள், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை.இதற்கு மாற்றாக ஆங்காங்கே சிலர் மட்டும், மிகச் சரியாக தங்களின் குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை அவர்களின் விருப்பத்துறையில் சரியாக திருப்பி விடுகின்றனர். இவ்வாறு தூண்டுதலைச் சரியான திசை நோக்கிக் கொடுக்கும் பொழுது, மிகக் குறுகிய காலத்திலேயே அக்குழந்தைகள் தமது துறையில் பிரகாசிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கான மற்றொரு உதாரணமே அமன் ரஹ்மான்.இவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களுக்கான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார்.
வட இந்தியாவின் உத்தராகந்த் மாநிலத்தின் தெஹ்ராடனைச் சேர்ந்தவரான இந்த எட்டு வயது சுட்டி, இப்போது பெரியவர்களுக்கு அனிமேஷன் கற்றுக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களை அமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கின்னஸ் புத்தகத்தில் "இளம் வயது சாதனையாளர்கள்" பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து கொண்டுள்ளார்.
எட்டு வயதிலேயே தெஹ்ராடனில் உள்ள கலைக் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள அமன் ரஹ்மான், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை படிப்பறிவற்றவர்; ஸ்கூட்டர் மெக்கானிக்காக உள்ளார். நான்கு குழந்தைகளுள்ள அமன் ரஹ்மானின் தந்தைக்கு இவர் நான்காவது பிள்ளை.தெஹ்ராடன் பகுதியில் "லிட்டில் பில் கேட்ஸ்" என்று யாராவது கேட்டால் அவர்களின் கையைப் பிடித்து அமன் ரஹ்மான் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் அங்குள்ள மக்கள்.
மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அமன் ரஹ்மானுக்கு அதிகரித்து விட்டதெனக் கூறுகிறார் இவரின் தாயாரான ஷப்னம் ரஹ்மான். பெரிய மகனுக்காக சிரமப்பட்டு வாங்கி வந்த பழைய கம்யூட்டர் ஒன்றில், அடிக்கடி அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வாராம் அமன் ரஹ்மான். இதைக் கண்ணுற்ற உறவினர்களும் நண்பர்களும் அமன் ரஹ்மானை கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் சென்று பயிற்சி பெற பெற்றோர்களைத் தூண்டியுள்ளனர்.இதைத் தொடர்ந்து இண்டராக்ட்டிவ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்லூரி சென்று தன் மகனைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அமன் ரஹ்மானின் தந்தை. அமனைப் பரிசோதித்து வியந்த கல்லூரி நிர்வாகம் அவரது கல்விக்காக ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்து கொடுத்தது.
கல்லூரியில் இணைந்த ஒரே மாதத்தில் அமன் ரஹ்மான் எழுதிய கம்யூட்டர் புரோக்ராம் ஒன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. காரணம், கணினி வல்லுனர்களால் பதினைந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்து எழுதக் கூடிய நிரல் துண்டினை ஒரே மாதத்தில் உருவாக்கியிருந்தார்.
இவரது சாதனைகளைப் பாராட்டி மாநில அரசு இவருக்கு லேப்டாப் ஒன்றும், ஒரு இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து ஊக்குவித்துள்ளது.அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இளம் வயது சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறார் அமன் ரஹ்மான். இதில் தமக்குக் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.
அமன் ரஹ்மானின் திறமையைக் கேள்விப்பட்ட உடனேயே, ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று அவரை ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறது. தமது குடும்பத்தினரோடு சேர்ந்து இதனை மறுத்துள்ள அமன் ரஹ்மான், தமது சேவை இந்தியாவிற்கு உதவிடும் வகையில் தாம் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அமன் ரஹ்மான் போன்ற இளம் விஞ்ஞானிகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இனம் கண்டு, தகுந்த பயிற்சியும் முறையான உதவிகளையும் செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதோடு வளரும் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறை எது என்பதைச் சரியாக இனம்கண்டு அதன்பால் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பெற்றோர்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஆவல்.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

9.1.09

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை மத்திய அரசு உத்தரவு
சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை
இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு),
பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

7.1.09

சிங்க‌ப்பூரில் க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு

சிங்க‌ப்பூர் இந்திய‌ முஸ்லிம் ச‌ங்க‌ங்க‌ள் ம‌ற்றும் ஜாமியா சிங்க‌ப்பூர் ஆகிய‌வை இணைந்து க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு 18.01.2009 ( 21 முஹ‌ர்ர‌ம் 1430 ) ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2.30 ம‌ணிக்கு சுல்தான் ம‌ஸ்ஜித் இணைப்பு அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இத்த‌க‌வ‌லை இந்நிக‌ழ்வின் நெறியாள‌ர் ப‌ன்னூலாசிரிய‌ர் டாக்ட‌ர் சையது இப்ராஹிம் ( ஹிமானா சையது ) செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.
ஜாமியா சிங்க‌ப்பூர் த‌லைவ‌ர் ஹாஜி அபுப‌க்க‌ர் மைதீன், பென்கூல‌ன் ம‌ஸ்ஜித் நிர்வாக‌க்குழு த‌லைவ‌ர் ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஜ‌லீல் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.
சுற்றுச்சூழ‌ல்,நீர்வ‌ள‌த்துறை ம‌ற்றும் முஸ்லிம் அலுவ‌ல்க‌ளுக்கான‌ பொறுப்பு அமைச்ச‌ர் மாண்புமிகு டாக்ட‌ர் யாகூப் இப்ராஹிம் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கிறார்.
ம‌ஸ்ஜித் அப்துல் க‌பூர் இமாம் ம‌வ்ல‌வி எஸ்.ஏ. ர‌பீக் அஹ‌ம‌து பாஜில் பாக‌வி, பென்கூல‌ன் ம‌ஸ்ஜித் இமாம் ம‌வ்ல‌வி அப்துல் கையூம் பாக‌வி ஆகியோர் உரை நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.
ஓ.எச். அப்துல் ம‌ஜீது இறைகீத‌ம் பாட‌ இருக்கிறார்.
மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌
எச்.எம். ச‌லீம் ( 97841814 ) ம‌ற்றும்
ஹாஜி ந‌சீர்க‌னி (96524721)
ஆகியோரை தொட‌ர்பு கொள்ள‌லாம்.
நன்றி: Imantimes@googlegroups.com

2.1.09

12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு பயிற்சி முகாம்

நெல்லை மாவட்ட TNTJ மாணவர் அணி நடத்தும்

பொது தேர்வு பயிற்சி முகாம்,

10'ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம்
நாள் : 11-01-09. ஞாயிற்று கிழைமை (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : 9 AM - 1 PM : 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
2 PM - 5 PM : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
இடம் : மாநகராட்சி திருமண மண்டபம்,
மேலப்பாளையம் காவல் நிலையம் அருகில்,
மேலப்பாளையம், நெல்லை மாவட்டம்

குறிப்பு : கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வினாத்தாள் புத்தகம்(Question Book ) இலவசமாக வழங்கப்படும்.
தொடர்பிற்கு : பைசல்- 9943935006
( நெல்லை மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்)


1.1.09

பொறியிற் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை

+2 தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவந்த பின் மேற் கொண்டு தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி பயில்விக்க பெற்றோர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். எதிர் காலத்தில் பொறியல் படிப்புக்கு அதிக வரவேற்பு இருப்பதை காண்கிறோம். எனவே, பொறியியற் கல்லூரிகளில் தம் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெரும் முயற்சி செய்து பல்வேறு தகவல்களை அரும்பாடுபட்டு தலூரட்டிய விபரங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அறந்தாங்கி சொக்கலிங்கம் என்னும் நண்பர்.

தகவல்களை திரட்டித் தந்த நண்பர் சொக்கலிங்கம் அவர்களுக்கு எமது நன்றி.

------------------------------------------------------------------
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சு முதல் வாரத்தில் தொடங்கும்

 தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.

 விடைத்தாள் திருத்தும்பணி மார்ச் 4 ஆம் வாரத்தில் துவங்கும்.

 விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.

 மே மாதம் 2 ஆம் வாரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 தேர்வுத்தாள் நகல் வேண்டுவோர் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் உடன் விண்ணப்பிக்கலாம் மறு ஆய்வு செய்து அறிவிப்பார்கள். மே மாதம் 2ஆம் வாரத்தில் ரிசல்ட் வெளியானவுடன் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.

 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும். +2 தேர்வு 6 இலட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்

 இந்த ஆண்டின் நிலவரப்படி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்துவருவதால் 75 முதல் 80 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லுரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
------------------------------------------
அண்ணா பல்கலைக் கழகம்

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.பொறியியல் கல்லூரிகள் நான்கு வகைப்படும்.

 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உரிய கல்லூரிகள்; மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள்.

 அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள்.

 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்.

 தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பொறியியல் கல்லூரிகள்.

ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM
SHREE SHANMUGA DEEMED UNIVERSITY THANJAVUR
CHEETINAD ENGINEERING COLLEGE CHENNAI
S.R.M நிகர் நிலைப் பல்கலைக் கழகம் சென்னை
சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை
------------------------------------

அண்ணா யுனிவர்சிட்டிக்கு உரிய கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தையும் அரசே நிறைத்துக் கொள்ளும்.அதே போன்று அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்

 சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவிகித இடங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும்

 சிறுபான்மையினர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் 50 சத விகித இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகள். அதனால் அரசாங்க ஒதுக்கீட்டிற்கான 65 சதவிகித இடங்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அரசாங்கம் தீர்மாணித்துள்ள கட்டண விகிதம்தான் அவர்கள் வாங்க வேண்டும். (லட்சக்கணக்கில் டொனேஷன் வாங்குவார்கள் என்பதுவேறு விஷயம்)

தமிழ்நாட்டில் உள்ள பொறியில் கல்லூரிகளை தரம் பிரிப்பது எப்படி? அரசாங்கத்திற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும்அரசுநிதி உதவிபெறும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்குவதால் கல்வித்தரம் மிகவும் உயர்நிலையில் இருக்கும்.மேலும் அண்ணா பல்கலைக் கழகம் உலகில் உள்ள பல்வேறு முக்கிய பல்கலைக் கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளபடியால் வெளிநாடுகளில் இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இக்கல்லுரியில் சேர்வதற்கு தகுதி அதிக கட்ஆப் மார்க் எடுக்க வேண்டும்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் மேம்பட்ட தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கொண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் தேசிய அளவிலும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு அளவிலும் தரச்சான்று வழங்கப்படுகிறது.

அவ்வாறு சான்றிதழ் பெற்ற கல்லூரிகளின் கல்வித்தரம் நன்றாக இருக்கும். இதில் சேருவதற்கு மார்க் கூடுதல் வேண்டும்.

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்

சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் மூன்றாவது நிலையில் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மாணவர்கள் எடுத்துள்ள கட்ஆப் மார்க் அடிப்படையில் Phase 1, phase 2 எனஇரு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு தவணையில் கவுன்சலிங் நடைபெறும். இந்தக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 65 சத விகித இடங்கள் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்.இந்தக் கல்லூரிகளின் தரம் அடிப்படைவசதிகள் மாணவர்களின் முதல் நிலை தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா யுனிவர்சிட்டி மூலம் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

அடுத்தது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்:

தன்னாட்சி உரிமை பெற்றவைகள் அவர்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அவர்களே நிரப்பிக் கொள்வார்கள். ஆனால் அரசாங்க விதிகளின்படி OC, BC,BC (MUSLIM) BC(CHRISTIAN),MBC,SC,ST. இவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டு விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதே போல் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை அனுசரித்து ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இப்பல்கலைக் கழகங்களின் தரம்; அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சில ஸ்தாபனங்கள்
Thanjavur sri shanmuga engineering college.
Chidambaram annamalai university.
Chennai chettinad university. ஆகியவை பெயர் பெற்றவைகள்.

கல்லூரியில் அட்மிஷன் பெறுவது எப்படி என்பதை தெறிந்து கொள்வதற்கு முன்பாக சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

கட் ஆப் மார்க் என்றால் என்ன? அது எவ்வாறு தோந்தெடுக்கப்படுகிறது?

+2 தேர்வில் MATHS (கணக்கு) பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் PHYSICS(இயற்பியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் CHEMISTRY(வேதியியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். மேற்கண்டவற்றுள்,கணக்குப் பாடத்திற்கான மதிப்பெண் 200க்கு 50 சதிவிகிதம் 100 மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும்.PHYSICS, CHEMISTRY இரண்டிலும் 25 % மதிப்பெண்கள் அதாவது50+ 50 = 100 என்று எடுத்துக்கொண்டு மொத்தம் 200 என்னும் அடிப்படையில் கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது.

கல்விக்கட்டணம் சம்மந்தமாக தெரிந்துகொள்ள வேண்டும். மூன்று விதமான இடஒதுக்கீடுகள் உண்டு.மதிப்பெண் தகுதி அடிப்படையில் கிடைக்கக்கூடியது இலவச இடஒதுக்கீடு எனப்படும்.

அண்ணா பல்கலைக் கழகம், அரசுக்கல்லூரிகள் அரசு உதவிபெறும்கல்லூரிகள் இவைகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக அரசுதீர்மானித்துள்ளது ரூ 8000 மட்டும்.

PAYMENT SEAT இதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது ரூ 32 500 இது தனியார் கல்லூரிகள் அரசுக்கு கொடுக்கக்கூடிய 65%ஒதுக்கீட்டு இடத்திற்கு பொருந்தும்.தனியார் கல்லூரிகளில் தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ஆண்டுக் கட்டணமாக ரூ 40 000 பெற்றுக் கொள்ள அரசுஅனுமதி வழங்கியுள்ளது.அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் (SS) Self Supporting Programme எனப்படும்; இணைப்புப் பாடத்திட்டத்திற்கு ரூ 40000 கடந்த ஆண்டு அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையாகும்.

Managment Seat எனப்படுவது தனியார் கல்லூரி நிர்வாகத்திற்குசொந்தமான 35% இடங்களுக்கு உரியதாகும் இதற்கு அரசாங்கம் ஆண்டுக் கட்டணமாக பெற்றுக்கொள்ள அனுமதித்துள்ளது ரூ 64000 தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 8 லட்சம்வரை டொனேஷன் வாங்குகிறார்கள்.மேலே கல்லூரி ஆண்டுக் கட்டணத்தைப்பற்றி தெரிந்து கொண்டோம். இவை தவிற வேறு என்னென்ன கட்டணங்கள் உண்டு என்பதையும்தெரிந்துகொள்ள வேண்டும்
கீழ்க்காணும் கட்டண விகிதங்கள் ஒரு ஆண்டுக்கு சுமார்

Collge Fees ....................................Rs 32 500
Caution deposit (Refundable).....Rs 5000
Admission fees..............................Rs 1000
Establisment charge .................. .Rs 3000
Room rent .....................................Rs 6000
Electricity ......................................Rs 1500
Mess Charge...................................Rs 15000
Book Materials.............................. Rs 16000
ஆக மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய்
இவை போக வெளிச் செலவுகள் சுமார் 20 ஆயிரம் ரூபாய்
ஆக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவாகும்.

செலவு விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும். நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.தமிழ் நாட்டின் தற்போதைய கல்வித்திட்டம் ஓரளவு நம்மைப் போன்ற நடுத்தர மக்களும் பயனடையும்படி அமைந்துள்ளது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கவுன்சலிங் என்றால் என்ன?

நாம் பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பம் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கிடைக்கப்பெற்று சரி பார்க்கப்பட்டு முதல் கட்டமாக Overall Rank அறிவிப்பார்கள் அடுத்து உடனே ஓரிரு நாட்களில் Community Rank அறிவிப்பார்கள். அடுத்து Random Number அறிவிப்பார்கள்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு வரும்படி தேதி மற்றும் நமது கட் ஆப் மார்க் இவைகளை குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் வீட்டிற்கு வரும். குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாக சென்னை செல்லவேண்டும். ஒரு மணி நேரம் முன்னதாக சென்று கலந்துகொள்ளவேண்டும். அங்கு நமது தகுதிக்கு ஏற்ப கல்லூரி ஒதுக்கித்தருவார்கள்.
---------------------------------

கவுன்சலிங் செல்வதற்கு முன்பாக தயார் செய்துகொள்ளவேண்டியவைகள்.
1) Residence (nativity) certificate
2) Birth ceftificate
3) Community certificate
4) Income certificate
5) Ration card xerox
6) Transfer certificate
7) Mark sheet
அப்ளிக்கேஷன் பூர்த்திசெய்வது எப்படி:?

500 ருபாய் கொடுத்து அப்ளிக்கேஷன் வாங்க வேண்டும் கவரின்மேல் ஒரு நம்பர் இருக்கும் அதுதான் நமது Registeration Number.
அப்ளிகேஷன் கவரினுள்
(1)application form
(2)code sheet
(3) envelope
(4) acknowledgement card
(5) information Guide
ஆகியவை இருக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் கூரியர் மூலமாக அனுப்பக் கூடாது.
acknowledgement card கவரின் உள்ளே வைத்து அனுப்பவேண்டும்.அனைத்து சான்றிதழ்களுக்கும் Attestation செய்து வாங்கிய நகல்களை மட்டும் அனுப்ப வேண்டும்
Information guide book ல் சகல விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கூடுதல் விபரங்களுக்கு
w.w.w.annauniv.edu/tnea2009

31.12.08

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவனை

இந்த (2008-2009) கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கி பார்வையிடவும்

28.12.08

"சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சி: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலியில் 3-வது ஆண்டாக தினமணி, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "சிகரத்தை வெல்வோம்' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜன. 2-ம் தேதி நடைபெற உள்ளது.
அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் தினமணி சார்பில் "சிகரத்தை வெல்வோம்' என்ற மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது, பாடங்களை சிரமமின்றிப் படிப்பது, தேர்வுக் காலத்தில் உடல்நிலையைப் பாதுகாப்பது, தேர்வுக் கூடத்தில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதும் முறை, கேள்விக்கான பதில்களை சிறப்பான முறையில் எழுதுவதற்கான உத்திகள் போன்றவை இந் நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் விளக்கப்படும்.
வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஜன. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது.
தொடக்க விழா:
இந் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுவார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. சசிகலா, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் கிளீட்டஸ்பாபு, பதிவாளர் பேராசிரியர் பொ. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து நெல்லை கண்ணன் பேசுவார்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து தூய யோவான் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் ஜான் கென்னடி பேசுவார். திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. காளியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுவார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆலோசனை கையேடும், குறிப்பெடுத்துக் கொள்ள நோட்டும், பேனாவும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், பள்ளி நிர்வாகிகளும் மேலும் விவரங்களுக்கு
92443 17205,
92443 17203
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

27.12.08

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!
கோவை, டிச. 25: வரும் 2010-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் அனைவரும் "ஆய்வாளர்கள்' என்றே அழைக்கப்படுவர்.
மாறிவரும் வர்த்தக சூழலில் சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கோவை, திருப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் சிக்கித் தவிக்கின்றன. வர்த்தகத்தில் எதிர்நோக்கும் பிரச்னையை சமாளிக்க தொழில் துறையினருக்கு வல்லுநர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது. இத்தகைய ஆலோசனையை வழங்கும் அரும்பணியை கோவை அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக பல தொழில் நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அண்ணா பல்கலை. செய்துள்ளது. மேலும், பல நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் அண்ணா பல்கலை. ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியது: வரும் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், தொழில் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் மையம் அண்ணா பல்கலை. வளாகத்திலேயே அமைக்கப்படும். இந்த மையத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அண்ணா பல்கலை.யை அணுகும் நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதை குறித்தும், மாறிவரும் சூழலை சமாளிப்பது குறித்தும் மாணவர்கள் ஆலோசனை வழங்குவர். தொழில் துறையினருக்கு அறிவு பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களாகவே கருதப்படுவர்.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டம் உள்பட பல்கலை. தெரிவிக்கும் அனைத்து தகவலும் இ-மெயில் மூலமே அனுப்பப்படும்.
அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கணினி வலை மூலம் இணைக்கப்படும். தொழில் துறை நிபுணர்களின் உரையை விடியோ கான்பிரன்ஸ் மூலம் மற்ற கல்லூரி மாணவர்களும் நேரடியாக பார்க்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நானோ தொழில் நுட்பம், எலக்ட்ரானிக் கழிவு மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்ய புதிய மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
நன்றி்: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

26.12.08

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 18:00 [IST] சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது. தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார்.அதன்படி 2009ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

23.12.08

தமிழகத்தின் பொறியில் கல்லூரிகள்

+2 முடித்த பின் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். பெற்றோரும் அதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்கத் தொடங்கி விட்டனர்.
பொறியியல் கல்வியில் அதிகமானோர் நாட்டம் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதற்காக தமிழகத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகளைப் பற்றிய முழு விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

21.12.08

இந்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை


முக்கிய அறிவிப்பு இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை)
இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) விண்ணப்பத்தை 30 - 6 -2008 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் விண்ணப்பத்தை http://minorityaffairs.gov.in/newsite/schemes/prematric/prematric.htm
இந்த இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .
பதிப்பு பரங்கிப்பேட்டை நண்பர்கள்
நன்றி: பரங்கிப்பேட்டை வலைப்பூ


16.12.08

என் அன்பிற்கினிய ஆசான்

இக்கட்டுரை நம் பள்ளி தொடர்புடையதல்ல என்றாலும் நம் பள்ளியைப் போன்று புகழ் பெற்ற கிரஸன்ட் பள்ளி தொடர்புடையது. அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அப்துல் கையூம் அவர்கள் தமது அன்பிற்கின ஆசானை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார். நம் பள்ளி முன்னாள் மாணவர்களும் இது போல் நமது ஆசான்களை நினைவு கூரலாமே!

Crescent Residential School - First Batch

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.
1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்” - என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்” - என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் - என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

- அப்துல் கையூம்
நன்றி: abdulqaiyum.wordpress.com


13.12.08

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்!

இஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு எற்படவேண்டும் என்றால் முதலில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும். பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை நமது நாட்டில் நமது சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான் கூறினார்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தைக்கால்தெரு சேக் சாஹிப் - தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:- உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்து சகோதரர்கள். இஸ்லாம் ஜாதி மத இன பேதம் பிரித்து பார்க்காத அனைவரையும் சகோதரத்துவ அன்புடன் பார்க்கும் மார்க்கமாகும். தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்கிறோம். அந்த அளவுக்கு கல்விக்கு பெருமை தேடி தரும் மார்க்கம் இஸ்லாம். பள்ளி படிப்பு முடிக்கும் முன் நம் வீட்டு பிள்ளைகளும் பாஸ்போர்ட் எடுக்கும் பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். படிக்காமல் நாம் அரபு நாடுகளுக்குச் சென்று நாம் வாங்கும் மூன்று மாத சம்பளத்தை படித்துவிட்டு வந்தவர்கள் ஒரே மாதத்தில் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். பட்டப்படிப்பு முடிக்காமல் அயல்நாட்டு வேலைக்கு செல்லவே கூடாது. ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன் பெறுகின்றான். ஆனால் ஒரு பெண் பயின்றால் அந்த குடும்பமே பயன் பெறும். அதனால்தான் இஸ்லாம் ஆண, பெண் இருபாலருக்கும் கல்வியை கட்டாய கடமையாக்கி இருக்கிறது. ஆண்களில் 64 சதவீதம், பெண்களில் 72 சதவீதம் மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு தாண்ட மாட்டேன் என்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 101 முஸ்லிம்களுக்கு ஒரு பட்டதாரிதான் உருவாகிறார். இதே சகோதர சமுதாயத்தில் 101 பேருக்கு 31 பட்டதாரிகள் உள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாமும் இந்த நாட்டில் கவுரவமாக வாழ கல்வியில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாணவ - மாணவியரின் பேச்சுப் போட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தில் மேல்நிலை எஸ்.எஸ்.எல். சி. மெட்ரிக் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவி யருக்கு அப்துல் ரஹ்மான் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துபை ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவர் முத்துப்பேட்டை ஜனாப் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் நம் பள்ளி முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது

11.12.08

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நம் சமுதாய மாணவர்கள் சமீப காலமாக உயர் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவ்விதம் உயர் கல்வி கற்பதில் எந்த வகையான உயர் கல்வியைத் தேந்தெடுக்கலாம் என்பதற்கு போதுமான வழிகாட்டுதல் கிடைக்காமல் பல மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நூல் அழகான வழியைக் காட்டுகிறது. வாசகர்கள் படித்துப் பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும்படி வேண்டுகிறோம்.
நூலாசிரியர் இளையான்குடி டாகடர் ஜாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் ஆபிதீன் அவர்களுக்கும், வெளியிட்ட Nellai Eruvadi Educational Association(NEEA)க்கும் நன்றி. நூலைப் படிக்க கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்

6.12.08

கும்பகோணத்தில் அரசுத்தேர்வு பயிற்சி மையம்

கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

மேலதிக விபரம் பெற 98 400 400 67
நன்றி: முதுவை ஹிதாயத்

4.12.08

கல்வி நம் தலையாய கடமை

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).இது இறைமறை வாசகம். கல்வியறிவை ஒருவர் பெற்றுவிட்டால் அவர் ஏராளமான நன்மைகளை கொடுக்கப்பட்டுவிட்டார் என படைத்த இறைவன் கூறுகின்றான். ஆன்மீகம் என்ற பெயரில் எந்த மதமும் கூறாத உன்னத சித்தாந்தத்தை கூறுவதோடு மேற்கூறிய வசனத்தின் மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுகிறது இஸ்லாம்.
இத்தகைய உயர்ந்த வழிகாட்டுதல்களை பெற்றுள்ள நம் சமுதாயம் கல்வியில் போதிய முன்னேற்றம் அடையவில்லை. நம் சமுதாய கல்வி முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் யாவை? என்பதை இனங்காட்டுவதோடு கல்வியின்மையின் காரணமாக நம் சமுதாயத்தில் நிலவும் அவலநிலைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாடு சுதந்திரம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் பருவ வயதை அடைந்த அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த அளவில் 100% கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 1991-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001ஆம் ஆண்டில் 65.38% ஆக உயர்ந்துள்ளது நமக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும் முஸ்லிம்களின் நிலை இன்னும் பரிதாபகரமாகவே இருந்துவருகிறது. 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி முஸ்லிம்களின் எழுத்தறிவு விகிதம் 59.1% ஆகும். அதே நேரம் 2.3% வாழும் கிறிஸ்தவர்களின் விகிதமோ 80.3-சதவீதத்தை தொட்டுவிட்டது என்பது வியப்பிற்குரிய செய்தி.

நம் சமுதாயம், கல்வியில் முன்னேறாததிற்கு காரணம் என்ன? முன்னேற்றத்தின் தடைகற்கள் எவை? என்பதை அலசி ஆராய்வது மிக அவசியம்.
நம் சமுதாயம் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதன் பின்னணி நீண்ட சரித்திரத்தை உள்ளடக்கியதாக உள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர தீரத்துடன் போராடிய நம் சமுதாயம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட அந்த கல்வியை புறக்கணிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம் கற்பது "ஹராம்" என்று மார்க்கத் தீர்ப்பளித்தது. ஆங்கிலக் கல்வியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நவீன கல்வியை புறக்கணித்தது நம் முன்னோர்கள் செய்த மிகப்பெரிய தவறு. விளைவு நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயத்தை விட 50 ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்.
அடுத்து வியாபார நோக்குடன் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க போதிய பணவசதி இல்லாமையும் ஓர் காரணம். நவீன பாடதிட்டங்கள் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர பெரும்பணம் தேவைப்படுகிறது. சாதாரண அரசுடைமை ஆக்கப்பட்ட பள்ளிகளில் கூட ஆரம்பத்தொகை மிக அதிகம். மேலும் குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், சுற்றுலா என்று மாணவ மாணவிகளிடம் பணங்களை கரக்கும் போக்கும் காணப்படுகிறது. குடும்பச் சூழல், போட்டிகள் நிறைந்த பதவிகள், நிச்சயமற்ற கல்விச் சூழல் போன்றவற்றின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி கடைகளில் வேலைக்கு சேரும் போக்கும் நம் சமுதாயத்தில் நிறைந்து காணப்படுகிறது. நல்ல அறிவு படைத்த கல்லூரி மாணவர்கள் கூட கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ஏ. வாசன் என்ற மாணவன் +2 வில் 1200 க்கு 1054 மதிப்பெண் பெற்று திருநெல்வேலி PET பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார். (நன்றி: சமரசம்). ஆக நிதிநிலைமையும் ஒரு காரணமாக அமைகின்றது. 1987-88 ல் மத்திய திட்டகமிஷன் நடத்திய ஓர் ஆய்வின் அறிக்கை இதை உறுதி செய்கின்றது. அப்போதைய இந்தியாவின் எழுத்தறிவு 52.11% ஆக இருக்கையில் முஸ்லிம்கள் 42% தான் கல்வி பெற்றிருக்கின்றனர். காரணம் ஆரம்ப கல்வி நிலையிலேயே பெருவாரியான முஸ்லிம்கள் தங்கள் படிப்பை இடையில் நிறுத்திவிடுகின்றனர் என்றும் இதற்கு மூலகாரணம் நிதி நிலைமைதான் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
மேலும் தேசிய மாநில சர்வே அமைப்பு (N.S.S.A) 1993-94 மற்றும் 1999-2000 ல் நடத்திய ஆய்வில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தம் படிப்பை பாதியிலேயே நிறுத்தி அன்றாட கூலி பெறும் தொழிலாளியாக மாறிவிடுகின்றனர் என்ற உண்மையும் தெரியவருகிறது. மேலும் படித்த இளைஞர்கள் மத்தியிலும் வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
ஆகவே பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் போக்கு மாறவேண்டும். கல்வியின்மையால் நாம் அன்றாடம் பல கஷ்டங்களை சந்திக்கின்றோம். இந்த வளைகுடா வாழ்க்கையில் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எத்தனையோ சகோதரர்களுக்கு எவ்வித பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இல்லை. காரணம் கல்வியின்மைதான். எத்தனையோ நல்ல அறிவுபடைத்த புத்திசாலிகள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பாஸ்போர்ட் எடுத்து வளைகுடாவிற்கு வந்து அதன் விளைவை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். தன்னைப்போல் தன் சந்ததியும் கஷ்டப்படக்கூடாது. எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அவர்களை படிக்க வைப்பேன் என்று நம் சமுதாய இன்றைய தலைமுறையினர் உறுதிபூண வேண்டும். நம் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஓரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவதுமில்லை.
பணம் படைத்த எத்தனையோ வர்த்தகர்களின் வாரிசுகள் ஓரளவுக்கு எழுத படிக்க தெரிந்த உடனேயே தம் குடும்ப வர்த்தகத்தை கவனிக்கச் சென்றுவிடுகின்றனர். அரசாங்கம் கல்வியளிக்க முன்வந்தும் நம் மக்கள் ஆர்வக் குறைவாகயிருப்பதும் கவலையளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி இல்லாத கிராமங்களில் கல்வியளிக்கும் பணியை தமிழக அரசு ஆரம்பம் செய்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கல்லாணி எனும் கிராமத்தில் இரண்டு மாணவர்கள் முன்வரவே கல்வி ஆரம்பமானது. மாணவர்களின் எண்ணிக்கை இரண்டை தாண்டாததால் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பள்ளியை மூடவுத்தரவிட்டார் புரிகிறதா? இதுதான் நம் நிலைமை.
ஆகவே நம் சமுதாயம் கல்வியில் ஆர்வம் காட்டுவதோடு வரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;. அடுத்து நம் சமுதாயத்திற்கென்று தனிப்பள்ளிக்கூடங்கள் போதிய அளவு ஏற்படுத்தப்பட வேண்டும். காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்றோர் சிறுபான்மையினரின் கல்விக்காக போராடி பெற்ற உரிமைகளை நம் சமுதாயத்தினர் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உயர் கல்விகளில் அக்கறை காட்டிய நம் முன்னோர்கள் ஆரம்ப, நடுநிலை, பள்ளிக்கூடங்களில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நமக்காக சுமார் 25 கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள், 19 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வியளிக்கும் பள்ளிகள் போதிய அளவில் இல்லை. விளைவு நம் சமுதாய சிறுவர்கள் பிற சமுதாய பள்ளிகளில் சேர வேண்டியுள்ளது. இதனால் பருவ வயதினரின் ஐவேளை தொழுகைகளுக்கு இடையூறாக அது அமைகிறது. எத்தனையோ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு கூட அனுமதி மறுக்கப்படும் அவல நிலையும் காணப்படுகின்றது. இது போதாதென்று எல்லா மத பண்டிகைகளுக்கும் பணம் வாங்கி கொண்டு கோலாகலமாக கொண்டாடும் நிலைமையும் கவலையளிக்கிறது. இன்றைய சூழலில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கொண்டாடாத பள்ளிகளே இல்லை. நம் சமுதாயத்தினரும் பள்ளி விதிமுறைக்குட்பட்டு பல்வேறு பண்டிகைகளை வேண்டா வெறுப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்நிலை மாறவேண்டுமென்றால் நமக்கென்று தனிப் பள்ளிக்கூடங்கள் உருவாக வேண்டும்.

கன்னிப்பெண்கள் கரையேறுவதற்கும், பள்ளிவாசல் கட்டுவதற்கும் அள்ளி வழங்கும் நம் சமுதாயச் செல்வந்தர்கள் தொடக்கப்பள்ளிகள் நிறுவுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தொடக்க கல்வியற்ற நிலையில் பட்டபடிப்பு என்பது எட்டாக்கனியாக போய்விடும். நமது இஸ்லாமிய அறக்கட்டளையின் கீழ் இயங்கும் எத்ததனையோ கல்வி நிலையங்களில் மூன்றிலொரு பங்கு கூட நம் மாணவர்கள் படிக்கவில்லை என்பதே இதற்கு சான்று.
மேலும் மிக குறைந்த அளவில் காணப்படும் புத்திசாலி மாணவர்கள் கூட போதிய வழிகாட்டுதலின்றி ஏனோ தானோ என்று குறிக்கோள் அற்ற நிலையில் மேற்படிப்பை தொடர்கின்றனர். தொழில் சார்ந்த கல்விகளில் சேர பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே அதற்கான பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். S.S.L.C-யில் நல்ல மதிப்பெண் பெற்று வரலாறு, பொருளாதாரம் என்று எதையாவது எடுத்துவிட்டு பின் அது தொடர்பான மேற்படிப்புகளை பெயர் அளவில் தொடரும் நிலையை தவிர்க்கவேண்டும். +2 படிக்கும் எத்தனையோ மாணவர்கள் எத்தனையோ படிப்புகள் இருந்தும் இயந்திரத்தனமாக B.A., B.B.A., B.Com. என்று ஏதாவது ஒன்றில் சேர்ந்துவிடுகின்றனர். புதிதாக வந்து கொண்டிருக்கும் புதிய படிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. Micro Biology, Bio Chemistry, Chemical Engineering, Textile Tecnology, Leather Tecnology, மீன் வள அறிவியல் போன்ற புதிய படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வேண்டும்.
அடுத்து நாம் எடுத்து படிக்கும் துறையில் ஆழ்ந்த மேற்படிப்பை மேற்கொள்ளவேண்டும். சமூகவியல் படித்து கொண்டிருக்கும் போதே (B.L) சட்டம் படிக்க சென்றுவிடுவதால் ஒரே துறையில் ஆழ்ந்த அறிவு பெறமுடியவில்லை. இந்த நூற்றாண்டின் இணையற்ற படிப்பு என்று வர்ணிக்கப்படும் IT (Information & Technology), Elecronic & Communication போன்ற படிப்புகளில் நம் சமுதாயம் ஆர்வம் காட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் எண்ணற்ற சேவைகளை செய்யலாம். Online வகுப்புகளில் இஸ்லாமிய பாடம் மற்றும் பட்டபடிப்புக்கு வழி செய்யலாம். வருங்காலத்தில் வீட்டிலிருந்தே பெண்களும், இல்லத்தரசிகளும் Online-ல் கல்வியை பெரும் பங்களிப்பை நம் சமுதாயதிற்கு செவ்வனே செய்யலாம். இன்னும் பத்திரிக்கை சார்ந்த படிப்புகள் இன்றைய கால சூழலில் மிக இன்றியமையாதது. Journalism படித்தவர்கள் நம் சமுதாயத்தில் மிக குறைவாக இருப்பதால் நம் சமுதாய பத்திரிக்கைகள் பல தரம் குன்றியவைகளாகவே இருக்கின்றன. ஆக படிப்புகள் எத்தனையோ இருந்தும் கூட நம் சமுதாய மாணவர்களின் பின்னடைவுகளுக்கு காரணம் நமக்கென்று வழிகாட்டிகள் இல்லை. கல்வியறிவற்ற பெற்றோர்களினால் தம் சந்ததிகளுக்கு வழிகாட்ட இயலாது.
நம் சமுதாயத்தில் படித்தவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் குழு அமைத்து ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு வருடந்தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேல் படிப்புக்கு வழிகாட்ட ஆலோசனை மன்றங்களை அமைத்து மாணவ மாணவிகளின் ஐயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இதனை நாம் செய்ய தவறியதின் காரணமாக நல்ல புத்திசாலி மாணவர்கள் கூட தம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. போதிய வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் அரசாங்க சர்வீஸ் கமிஷன் போன்ற தேர்வுகளில் கூட எழுதுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். 1983-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரத்தின் Group-3 சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பங்கேற்ற 2352 மாணவர்களில் 76 (3.27%) பேர்தான் முஸ்லிம்கள் இதேப் போல் Group-3 தேர்வில் பங்கேற்ற 497 பேரில் 12 பேர் தான் (2.44%)-ம் உதவி சர்ஜன்கள் தேர்வில் 3503 பேரில் 162 பேர் தான் (4.62%) பங்களித்திருக்கின்றனர்.
அடுத்ததாக நம் கல்விக்கூடங்களிலுள்ள சில தவறுகளையும் இங்கு சுட்டிகாட்டுதல் அவசியம். இன்றைய நவீன கல்வி கோட்பாட்டின் பின்னணியில் மேற்கத்திய கலாச்சாரம் நம் சமுதாய மாணவர்களையும் பீடித்திருக்கிறது. இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள், கற்புநெறி, இறையச்சம் போன்றவை போதிக்கபடாத காரணத்தினால் மேற்கத்திய காலச்சாரத்திற்கு பலியாகி இஸ்லாத்தைப்பற்றி தெரியாமலேயே அதனை விமர்சிக்கும் அறிவு(?) ஜீவிகளாக மாறிவிடுகின்றனர்.
இன்றைய அவசிய தேவை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய நல்லொழுக்க பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் இஸ்லாமிய சட்டம், குர்ஆன் விளக்கவுரை போன்றவற்றைக் கற்பிப்பது மிகவும் அவசியம். நம் சமுதாய கல்லூரிகளின் நிலையே இதுவென்றால் அரபி மதரஸாக்கள் முழுக்க முழுக்க ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே நிற்கின்றன.

உத்திர பிரதேசத்தில் "தீனீ தஃலீம்" என்ற பெயரில் 6000 கிராமங்களில் நடத்தப்படும் மதரஸாக்களில் அறிவியல் சார்ந்த எந்த நூலும் பாடத்திட்டத்திலில்லை. இத்தகைய மதரஸாக்களில் பட்டம் பெற்று வெளிவரும் ஆலிம்கள், இன்றைய நவீன பிரச்சனைகளான இன்சூரன்சு, குளோனிங், ஷேர் மார்க்கெட் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு கூற தயக்கம் காட்டுகின்றனர். குறைந்த பட்சம் ஆலிம்களுக்கு கம்பியூட்டர் அறிவு அவசியம். மேலும் இன்றைய இணைய (Internet) யுகத்தில் பல வித அனாச்சாரங்களில் பயன்படும் இணைய (Internet) போன்றவற்றில் இஸ்லாமிய கருத்தாக்கங்கள் மற்றும் இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்களை உலகளாவிய அளவில் விளக்கம் அளிக்க அழைப்புப்பணியை வலைமனைகள் மூலம் முடுக்கி விட நம் சமுதாய ஆலிம்கள் திறமை படைத்தவர்களாக உருவாக வேண்டுமென்றால் நம்முடைய அரபி மதரஸாக்களின் பாடத்திட்டங்களில் புனர்நிர்மாணம் அவசியம்.
இன்று ஆலிம்கள் தொழுகை, நோன்பு போன்றவற்றோடு தம் பணியை சுருக்கிக் கொள்வதினால் படிப்பறிவு மிக்க சில முஸ்லிம் இளைஞர்கள் வலைமனைகளில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டாலும் மார்க்க சட்ட விளக்கங்களுக்கு ஆலிம்களையே சார்ந்திருக்கின்றனர். மதரஸாக்களில் மார்க்க கல்வியுடன் நவீன தொழில் நுட்ப கல்வியும் சேர்த்தால் இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறலாம். இறைவன் துணை செய்வானாக!
(ஆக்கத்திற்கு உதவியவை: Manorama Year Book 2005, தினமணி.காம், ஒற்றுமை, சமரசம்)
நன்றி் இஸ்லாம் கல்வி.காம்

என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்.‏?

அஸ்ஸலாமு அலைக்கும்.

எத்தனை விதமான படிப்புகள் இருக்கின்றன? எங்கே படிக்கலாம்? வேண்டிய த்குதிகள் என்ன? போன்ற விளக்கங்களுடன் தமிழில்
பேராசிரியர் ஆபிதீன் (டாக்டர் ஜாகீர் உசேன், இளையாங்குடி) எழுதிய புத்தகம்.

http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf

இதைப் பிரதி எடுத்து ஓவ்வொரு பள்ளிவாசல்களிலும். ஊரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வையுங்கள். இன்ஷாஅல்லாஹ், சமுதாயம் பயன் பெறும்.

(சேவை: நெல்லை ஏர்வாடி எடுகேசனல் அசோசியேசன்.)
(Service: Nellai Eruvadi Educational Association - NEEA)
(Website: http://www.nellaiEruvadi.com/neea )

3.12.08

தமிழ் மாணவிகள் உலக சாதனை

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் இரண்டு தமிழ் மாணவிகள் (கார்த்திகா மோகன் & வர்சா ராஜா) மலேசியாவில் உலக அளவில் நடந்த கணிதப் போட்டியில் ( UCMAS Abacus and Mental Arithmetic Int'l. Competition) கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று வந்துள்ளார்கள், அதிலும் கார்த்திகா மோகன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி பங்குபெற்ற 600 பேரில் 200 கேள்விகளுக்கு 8 நிமிடங்களில் 100% சரியான விடையுடன் பதிலளித்து முதலிடத்தை பெற்று தங்ககோப்பையை தட்டியுள்ளார்.

தமிழர்கள் சார்பில் இம்மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்கள்...
நன்றி: சவூதி தமிழ்ச் சங்கம்

16.11.08

அஞ்சல் வழியில் அரபி மொழி

அஞ்சல் வழியில் அரபி மொழி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரேடியோ கெய்ரோ அரபி மொழியினை ஒலிபரப்பி வருகிறது. இதனைக் கேட்கும் நேயர்களுக்கு அரபி மொழி பயில புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.அரபி மொழி பயிலக்கூடிய புத்தகங்களை இலவசமாகப் பெற தங்களது சுய குறிப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெறலாம்.
Radio Cairo
Arabic By Radio
P O Box No. 325
CairoP.C.N. 11611
A.R.EGYPT
நன்றி: முதுவை ஹிதாயத்

8.11.08

10, 12ம் வகுப்பு தேர்வு: மேலும் 5 நிமிடங்கள்

சென்னை: பத்தாவது மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளின்போது, வினாத்தாளை மாணவ, மாணவியர் படிக்கும் நேர அளவு 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடமாக அதிகரி்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.) சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கான சி.டி. வழங்கும் விழா, ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா, அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடந்தது.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களையும், ஆங்கில பயிற்சிக்கான சி.டி.க்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உலகத்தோடு தொடர்புகொள்வதற்கு ஆங்கில மொழி அவசியம்.மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும். இதற்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்சிக்கூடங்கள் கொண்டுவரப்படுகின்றன. அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 7 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1,150 பள்ளிகளுக்கு 3 ஆயிரத்து 450 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன.
தற்போது நுழைவுத்தேர்வு இல்லாததால் அதிக மார்க் பெறும் கிராமப்புற மாணவர்கள் எளிதாக என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருகிறார்கள். ஆனால், ஆங்கில அறிவு குறைவு காரணமாக முதல் செமஸ்டரில் தடுமாறுகிறார்கள். இந்த குறைப்பாட்டைப் போக்கும் வகையில் ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆங்கில புலமையும், கம்ப்யூட்டர் அறிவும் இருந்தால் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு உலகில் எந்த மூலையிலாவது வேலை கிடைப்பது உறுதி.
இந்த ஆண்டிற்குள் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடும். தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாளை படிக்க 10 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்து வினாத்தாள் படிக்க கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டு 15 நிமிடமாக அதிகரிக்கப்படும். பிளஸ்-2 செய்முறை தேர்வு, தேர்வு நடைமுறை எதிலும் எவ்வித மாற்றமும்செய்யப்படவில்லை என்றார் தங்கம் தென்னரசு.
நன்றி: ThatsTamil

7.11.08

மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்கள்.

மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்கள்.

100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. திரு. பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.
அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.
* Visual Studio 2005/2008 Professional Edition
* Expression Studio, includingo Expression Webo Expression Blendo Expression Designo Expression Media
* SQL Server 2005 Express* SQL Server 2005 Developer Edition
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)
மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்
http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1
தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.
இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
http://www.aptech-education.com/microsoft_dreamspark.html
http://www.edgeineers.in/dreamspark.aspx
நன்றி: நீதியின் குரல்

27.10.08

பொறியியல் கல்வி-தகுதி மதிப்பெண் குறைப்பு

சென்னை: பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச பிளஸ் 2 தகுதி மதிப்பெண் வரம்பை தமிழக அரசு குறைத்துள்ளது.சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கெனவே நுழைத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆனாலும் கடந்த 2006-07 கல்வியாண்டில் மாணவர்கள் சேராததால் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. இதேபோல் 2007-08ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்தாண்டு முதல் பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் பெறவேண்டிய மதிப்பெண்களான 60 சதவீதம் 55 சதவீதகமாகக் குறைக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது.இதன்மூலம் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.
நன்றி: Oneindia

26.10.08

மாணவர்களுக்குப் பயனுள்ள சில தளங்கள்

SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: மாணவர்களே, முதலில் இந்த சுட்டியினை(link) பாருங்கள், please all student's visit this link,

24.10.08

FREE Scholarship, கல்வி உதவித்தொகை

SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Scholarship, கல்வி உதவித்தொகை

Education Help, இலவச கல்வி உதவி,

ஏழை மாணவர்கள் பயனடைய சில இணைய தள முகவரிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Education Help, இலவச கல்வி உதவி,

19.10.08

கல்விச்சேவை தகவல்கள்!


கல்விச் சேவை பற்றிய சில தகவல்களையும் அவற்றை அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

நான்கு ஆண்டு பி.பி.ஏ.,
நான்கு ஆண்டு பி.பி.ஏ., டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பை ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி நடத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத் துடன் இணைந்து நடத்தும் இந்தப் படிப்புக்கு, ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது!
மேலும் விவரங்களுக்கு: www.nithm.ac.in
ஐ.ஓ.சி., ஸ்காலர்ஷிப்
விளையாட்டு வீரர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஜூனியர் லெவல் விளையாட்டு வீரர்கள், அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், கேரம், ஹாக்கி, கோல்ஃப், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகளில் விளையாடுபவர்களும் இந்த உதவித் தொகை பெற விரும்பினால், வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள் 450 பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவிருக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com

ஐ.ஐ.டி-யில் எம்.பி.ஏ.,
மும்பை, டெல்லி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி-க்களில் மேலாண்மைப் படிப்புகள் படிக்க தனியே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் (Joint Management Entrance Test). கான்பூர் ஐ.ஐ.டி நடத்தும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். டிசம்பர் 14-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்!
மேலும் விவரங்களுக்கு: http://www.iitk.ac.in/gate

தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்.,
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் நடத்தும் பி.எட்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்டோபர் 18-ம் தேதி நடைபெறஇருக்கிறது. இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங்
நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீ யரிங் துறையில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேரலாம். ஓராண்டுப் படிப்பு இது. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றமாணவர் கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27. விண்ணப் பங்களை செப்டம்பர் 22-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.nptisr.com

சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள 'அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்' பயிற்சி அளிக்கிறது. வருகிற டிசம்பர் முதல் 6 மாதங்களுக்குப் பயிற்சி. முழு நேரப் பயிற்சி அல்லது பகுதி நேரப் பயிற்சி என வசதிக்கேற்ற பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். முழு நேரப் பயிற்சிக்கு 200 மாணவர்களும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 மாணவர்களுக்கும் அனுமதி. முழு நேரப் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டு. அனுமதிக்கு நுழைவுத் தேர்வு உண்டு. நவம்பர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வில் பங்கேற்க, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக் கும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.civilservicecoaching.com
பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!
பேங்க் ஆஃப் பரோடாவில் ஆயிரம் கிளார்க் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைந்தபட்சக் கல்வித் தகுதி பிளஸ் டூ என்றாலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 6-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வு நவம்பர் 30-ம் தேதி!
மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.com
டெக்னிக்கல் ரைட்டிங் பயிற்சி
விளக்கக் கையேடுகள், பதிவேடுகள், பயனாளிகளுக்கான குறிப்புகள் போன்றவற்றை ஓர் இலக்கண வரையறையுடன் எழுதுவதுதான் டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன். இணையத்திலும் இந்தப் பணிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன் குறித்த ஒரு மாதப் பயிற்சியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.பி.டி.இ. மையம் வழங்குகிறது. எம்பெட்டட் சிஸ்டம் டிசைன் குறித்த மூன்று மாத குறுகிய காலப் பயிற்சியையும் இந்த மையம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 99400 18051, 04422201777
அட்வர்டைசிங்!
அகமதாபாத் முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் நிறுவனம் ஹூயூக்ஸ்நெட் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து அட்வர்டைசிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன் முதுநிலை சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்த ஓராண்டுப் படிப்புக்குக் கட்டணம் ரூ.68,500. பட்டப் படிப்பை முடித்த மாணவர் களும் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களும் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.hnge.in
ரீ-டெய்ல் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகம்
18 லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் சில்லறை வர்த்தகத் துறையில் தகுதி வாய்ந்த திறனாளர்களை உருவாக்குவதற்காக புனே அருகே புதிதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாகிறது. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியில் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமுதாய வானொலிப் படிப்பு!
சமுதாய வானொலி குறித்த சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரி முதல் தொடங்கப்போவதாக இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ப்ளஸ் டூ முடித்த மாணவர்களும், சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்!
கலைத்திறன் படைத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை!
இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினைத் திறன் உள்பட கலைத் திறன் படைத்த 10 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்ச்சுரல் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500 மாணவர்களுக்குத் தலா ரூ.3,600 வீதம் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் 31-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் கல்ச்சுரல் ரிசோசர்ஸ் அண்ட் டிரெயினிங் அமைப்புக்குக் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்!
மேலும் விவரங்களுக்கு: www.ccrtindia.gov.in
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட்!
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட் என்ற புதிய சான்றிதழ் படிப்பை இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. அமைப் பின் ஒத்துழைப்புடன் இந்தப் படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் இப் படிப்பில் சேரலாம். பத்தாம் வகுப்பு படித்து மூன்று ஆண்டு தொண்டு நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்களும் சேரலாம். விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி அக்டோபர் 31.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் தற்கால இந்தியா!
இந்தியக் கலாசாரத்துக்கு இன்னொரு பெருமை. இந்தியாவைப் பற்றியும் அதன் கலாசார, பொருளாதார அம்சங்களைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தற்கால இந்தியா பற்றிய எம்.எஸ்ஸி., படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கியப் பொருளாதாரச் சக்தியாக உருவாகி வரும் இந்தியா பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அடுத்து இப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது!
டெல்லியில் லா ஸ்கூல்!
சட்டக் கல்லூரிகள் இருந்தாலும்கூட, அதைவிட லா ஸ்கூல்களில் படிக்கும் மாணவர் களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. டெல்லியிலும் நேஷனல் லா ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கட்டணம் ரூ.1.25 லட்சம் (இரண்டு செமஸ்டர் களுக்கு)!
வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவப் படிப்பு!
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.டி., எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு வருகிற டிசம்பர் 13-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
மாணவர்களுக்குக் கூடுதல் நேரம்!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் போது வினாத்தாள்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்காக ஏற்கெனவே 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விடைத்தாளில் பதிவு எண்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றைப் பதற்றமில்லாமல் மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மேலும் 5 நிமிடங்கள் வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான ஆய்வுக் குழு அறிக்கையைப் பொறுத்து, இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்!

அஞ்சல் வழி மேற்படிப்பு:

அஞ்சல் வழி மேற்படிப்புகளுக்காக இந்திய அரசு ஒரு நடுவண் மையத்தை ஏற்படுத்தியுள்ளது.. அதன் பெயர் Distance Education Council (DEC). இந்த அமைப்பு அஞ்சல் வழி கல்வியை முறைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் வலையேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் வலைமனை www.dec.ac.in இந்தியாவில் Distance Education தற்போது மிக பலம் பெற்ற வகையில் வளர்ந்து வருகிறது. முதலாவது, Online Education Introduction - இது இன்னும் கருத்து நிலையிலே இருக்கிறது. இரண்டாவது, Convergence System - கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு பட்டப்படிப்பை படிக்க அனுமதி.. இவ்வளவு நாட்கள் அதை செய்திருந்தால் அது அனுமதிக்கப் பட்டதல்ல.. மூன்றாவது, அத்தனை பட்டப் படிப்புகளையும் முறையான வகையில், குறிப்பிட்ட தரத்துடன், தேவைக்கேற்ற நேரத்தில் படிக்க முடிகிறது. மேலதிக விபரங்கள் www.ignou.ac.in

தொகுத்தவர்கள்: எம். ரிஷான் ஷரீஃப் மற்றும் ஏ. அஹமத் ஜுபைர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

17.10.08

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

முதுவை ஹிதாயத்: சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

14.10.08

சுவீடனில் இலவசமாகப் படிக்கலாம் வாங்க

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.
அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து.
டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.
இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்.
ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.
சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH, உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ், லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.)(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல, சுவீடனில் படிக்க Studera என்ற மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அதற்கான இணையத்தளம் www.studera.nu
ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)
இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.
படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால், இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.
கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.
இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.
முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த 'மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.
சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.
அதி முக்கிய இணையத்தளங்கள்:
-----------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

30.9.08

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ நண்பர்களுக்கும், நமக்கு அறிவைப் புகட்டி நல்வழி நடத்திய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், நம் கல்வி நிறுவனத்தை திறம்பட நடத்திச்சென்ற முன்னாள் நிர்வாகிகளுக்கும், இந்நாள் நிர்வாகத்தினருக்கும், ஆக்கூர் வாழ் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.